முரசு கொட்டி முன்னறிவிக்கிறேன்

என் போதி மரம்

அருட்சகோ. R. குழந்தை அருள்
தலைமையாசிரியர்
புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி
இராயப்பன்பட்டி, தேனீ மாவட்டம்.

முரசு கொட்டி முன்னறிவிக்கிறேன்

ஒரு புரட்சி புறப்பட்டு இருக்கிறது! ஒரு போர்வாள் களமிறங்கி இருக்கிறது! ஒரு தென்றல் புல்லாங்குழலில் நுழைந்திருக்கிறது. ஒரு புயல் கரையைக் கடந்து இருக்கிறது. எங்கு உதயம் தோன்ற வேண்டுமோ? அங்கு தோன்றாவிட்டால் இந்த உலகம் இருட்டில் உறங்கும். எங்கு புரட்சி தோன்ற வேண்டுமோ? அங்கு தோன்றினால் இந்த உலகம் புரண்டு படுக்கும்.

இதோ இளைஞனில் தோன்றியிருக்கிறது. இளைஞனுக்காய் தோன்றியிருக்கிறது. என் பாசறையிலிருந்தே தோன்றியிருக்கிறது. ஒரு சகோதரனே புறப்பட்டிருக்கிறான்.

இவனது கள்ளமில்லா  அன்பு, எதையும் கற்கத் துடிக்கிற பண்பு, இவனிடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் இவனுக்குக் கற்றுக் கொடுக்க என் மனசு துடிக்கும். இவனது இதயம் என் அன்பினால்  துடிக்கும். நான் கல்வியுலகில் பார்த்த சாரதியாக பவனி வரும்போது அம்பு செலுத்தும் அர்ஜுனனாக இவனை அருகில் வைத்திருப்பேன்.

இவன் தயங்கும்போது, இவனைத் தட்டிக் கொடுத்து தடம் காட்டி நிற்பேன். இவனைச் சாதுவாக்கியதிலும், சரித்திரம் படைக்கவைத்ததிலும் எனக்கும் பங்குண்டு. இதுவரை எங்கள் உறவுக்குள் பறந்தவனை  உலகிற்கு  அனுப்பி வைக்கிறேன்.

சென்று வா! வென்று வா!

என்றும் அன்புடன்

அருட்சகோ. R. குழந்தை அருள்