நாமவிழா வாழ்த்துக்கள்

 

நட
நடந்தவை நல்லதற்கே
நடப்பது
நாளைய உலகிற்கு!
 
நடந்தது
தெருமுனைதான்
நடப்பது
திருப்புமுனை!
 
நடப்பது
பாதைக்காக அல்ல
நடப்பது
பக்குவத்திற்காக!
 
நடக்கும்போது
நாற்புறமும் தெரியும்
நடக்கும் போது
நம் பலமும் புரியும்
 
நட
நாலும் நடக்கும்
நடக்கும் போது – பின்னால்
நாலு பேரும் நடப்பார்கள்
 
நடக்கும் போது
நல்லவையும் நடக்கும்
நடக்கும்போது
நம் பாதங்கள்
பள்ளங்களையும் கடக்கும்
 
 
நடக்கும்போது – பல
தடைகளும் தகரும்;
நடக்கும் போது – பல
விடைகளும் கிடைக்கும்
 
நடந்த தடங்கள்;தான்
பாதையாகிறது
நாளைய உலகமும்
அதைத்தான்
எதிர்பார்க்கிறது
 
பயணம் முடியவில்லை
பாதைகள் மூடியிருக்கிறது
சூரியன் வந்துவிட்டால்
பனிக்குப் பணியில்லை
 
நட
நம்பிக்கையோடு
நல்லதே நடக்கும்
 
நம் செயல்களுக்கெல்லாம்
நல்லவை
இறைவனிடமிருந்து கிடைக்கும்
இறைவன் ஆசியோடு – எந்நாளும் 
இனிதே மலர

இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.