28

May

2015

வாழ்வியல் தொடர்

துணையாய் நிற்போம், தூணாயச் சுமப்போம்.

துணையாய் நிற்போம், தூணாயச் சுமப்போம்.

துணையாய் நிற்போம், தூணாயச் சுமப்போம்.

மனதால் இணைந்த ஒரு குழுவால் மட்டுமே இப்பூமிக்கு மறுமலர்ச்சியைக் கொண்டுவரமுடியும் என்பது கடந்தகால வரலாறு. தனிமரம் தோப்பாகாது, ஒரு கை ஓசை எழுப்பாது, ஒரு பூ மாலையாகாது என்று கடந்த காலத்துப் பழமொழிகளை இன்னும் நம் காதுபடக்கூறுவது கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. காரணம் பூமியில் புதிதாய் ஒன்று மலரவேண்டுமென்றால் தனிமனிதனின் சிந்தனையும் சக மனிதர்களி;ன் ஒத்துழைப்புமே சாதித்துக் காட்டியிருக்கிறது. சரித்திரம் படைத்திருக்கிறது. சிந்திப்பதை செயல்வடிவமாக்க அதனைச் சேர்ந்த எண்ணங்களை மனதில் இனம் கண்டவர்கள் தன்னில் ஒருவரைத் தாமே தேர்ந்து கொண்டு, தனக்குரிய இன்ப துன்பங்களைத் தியாகம் செய்து அர்ப்பண உணர்வோடு செயல்புரிந்து அதிசயம் நடத்தியிருக்கிறார்கள்.

கடவுள் படைப்புகளில் மனித இனம் மட்டுமே மகத்தான இனமாகும். அது காலத்தால் தன்னைத் தானே செதுக்கிக்கொண்டு வந்ததால் இன்று கடவுளுக்கு இணையாகச் சிற்பமாகவும், சிலையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கோபத்தில் கொதித்தெழும் போதும் சாந்தம்; இழையோடிவரும். லட்சிய வெறியோடு ஓடிக்கொண்டிருக்கும் போதுகூட தியாகமும், விட்டுகொடுத்தலும், முன்னிருத்தப்படும். தானே பாதிக்கபடும் போதுகூட ஒரு உயர்ந்த இலட்சியத்திற்காக மன்னிப்பும் சகிப்புத் தன்மையும், அவர்களுக்குள் ஊற்றெடுக்கும். இதனால் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொள்வார்கள். தானே மகானாக உயர்ந்து நிற்பார்கள். இத்தகைய சமுதாயச் சூழலில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளாத மனிதர்களால் மடடுமே; இன்றளவும் பாதிப்பைச் சமூகம் சந்;தித்துக் கொண்டிருக்கிறது. விழிப்புணர்வுடன் வாழும் மானிடச்சமூகம், எப்போதும் வெற்றியடைந்து கொண்டே இருக்கிறது.

தனக்கு எதிராகத் தானே பிரிந்து கொண்டு முறைப்பதும், மோதுவதும், சீறுவதும், சீரழிப்பதும், திட்டுவதும், தீர்த்துக்கட்டுவதுமாக இருந்த எந்தக் கூட்டமும் மட்டுமல்ல எந்த உயிரினமும் காலத்தால் அழிந்துவிட்டது என்பது கண்கூடு, முயலையும், மயிலையும் பாதுகாக்கவேண்டும் என்றவுடன் இன்று அவை பலுகிப்பெருகி நிற்கின்றன. ஆனால் புலி, சிங்கம், கரடி, இனங்களைப் பாதுகாக்க அதைத் தேடித் தேடி அல்லவா கணக்கெடுக்க வேண்டியுள்ளது. அது பிறரால் மட்டுமல்ல தன்னுடைய கோழைத்தனைத்தாலும், வறட்டுக்கர்வத்தாலும் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறது.

இந்திய சுதந்திரத்தை எண்ணிப் பாருங்களேன். பாரதி இருந்தான், பகத்சிங் இருந்தான், நேதாஜி இருந்தார். நேருஜி இருந்தார். ஆயினும் காந்திகாட்டிய வழியில் பயணித்ததால் இன்று ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கினோம் அந்த உணர்வோடு இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலட்சியத்தோடு போராடுகிறோம் என்று புறப்பட்டவர்கள் எல்லாம் தனக்குள் ஏற்பட்ட பிளவுகளால் தானே அழிந்து போனாhர்கள்; விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிகள் கூட அப்படித்தானே, பல்வேறு சாதனைகள் செய்த துறவற சபைகள் கூட தனக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் இன்று காணாமல் போய்விட்டார்கள் என்பது சரித்திரம் சொல்லும் கசப்பான உண்மை.

மும்பைப் பகுதியிலே ஒரு விழா நடைபெறும் அதற்குப்பெயர் உறிஅடித்தல் எனப்படும் முதலில் ஒரு நாற்பது பலமுள்ளவர்கள் வந்து ஒருவர் தோளில் ஒருவர் கரங்கள் போட்டு சுற்றி வட்டமாக நிற்பார்கள் அதற்குப்பின் அவர்கள் மேல் ஒரு முற்பது பேர் நிற்பார்கள். அதன்மீது 25, 20, 15, 10, 5 என நின்று இறுதியில் ஒருவர் ஏறி நின்று அந்த உறியை அடிப்பார். எல்லோருக்கும்; மேல்நின்று உறி அடிப்பவர் கீழே நிற்கிறவர்களைவிட வலுக்குறைந்தவராகக்கூட இருப்பார். ஆனால் அவ்வளவு உயரத்திற்குச் செல்ல துணிச்சலும், தனக்கு கீழ் உள்ளவர்கள் மீது உள்ள நம்பிக்கையுமே அந்த வெற்றியை ஈட்டித்தரும். அந்த வெற்றிக்கு ஒவ்வொருவரும் காரணம் ஆனால் எந்த ஈகோவும் இல்லாமல் தன்முகம் கூடத்தெரியாமல் ஒருவர் ஒருவரைக் காத்து நிற்பார்கள், இங்கு சாதி, மதம், கல்வித்தகுதி, செல்வாக்கு, பதவி எதுவுமே இல்லை, வெற்றி ஒன்றே இலக்கு என்பதாகும்.

இத்தகையை எண்ணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, இலட்சியங்களை வளர்த்துக்கொண்டு சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து விட்டு வீறுநடைபோடுவோம் வெற்றித் திசையை நோக்கி…

அன்புடன்
சகோ. ஜோ அன்டனி தி.இ.ச.,

ARCHIVES