13

Apr

2016

பிச்சைக்காரன்

கடவுள் ஒருநாள் தம் தேவதூதர்களை எல்லாம் அழைத்து ஒரு மாநாடு நடத்தினார். அப்போது இந்தப்பூமியில் பஞ்சம், பசி, பட்டினி, வன்முறை, பேரழிவு, லஞ்சம், கொலை, கொள்ளை என அனைத்தும் நமக்கு எதிராக நடந்தாலும், இந்த மக்கள் நம்மை ஒருபோதும் மறக்கவில்லை. நமக்காக அவர்கள் எப்போதும் நேரம் ஒதுக்கி வழிபாடு, கும்பாபிசேகம், கோயில்கட்டுதல் என எவ்வளவோ செலவு செய்கிறார்கள். இவர்களுக்கு நாம் ஏதாவது செய்தே ஆகவேண்டும் என உருக்கமாகப் பேசினார் எனவே அவர்களுக்குள் கலந்துபேசி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது என்னவென்றால் பூமியில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து பிச்சைக்காரர்களே இல்லாமல் செய்துவிடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை உடனே செயலாக்கத் தேவதூதர்கள் அனைவரும் பூமிக்குப் புறப்பட்டார்கள்.

பூமிக்கு வந்த தேவதூதன் நேராகக் கோயில் வீதியில் படுத்திருந்த ஒரு பிச்சைக்காரனைச் சந்தித்து, தான் வந்ததன் நோக்கத்தைச் சொன்னார். உடனே அதனை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? என்றான். நீங்கள்தானே பிச்சைக்காரர்கள்! அதனை மாற்றுவற்காகத்தானே வந்திருக்கிறேன் என்றார். உடனே பிச்சைக்காரன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

வணிகத்தைப் பற்றி அறியவந்த ஒருவன் சூப்பர் மார்க்கெட்டுகளை விட்டுவிட்டு ஒரு பெட்டிக்கடைக்காரனிடம் பேசிக்கொண்டிருப்பதுபோல் இருக்கிறது. ஓளியினைத் தேடிவந்த ஒருவன் சூரியனை விட்டுவிட்டு மின்மினிப் பூச்சியைப் பின் தொடர்வது போல் இருக்கிறது என்றான். தேவதூதன் குழம்பிப் போனான். திகைத்துப்போய் காரணம் தெரியாமல் விழித்தான். உடனே அந்தப்பிச்சைக்காரனிடம் பேச ஆரம்பித்தான்.

வாழ்க்கைக்காக பலர் பலவேசம் போட்டிருக்கிறார்கள். நாங்கள் வயிற்;றுப் பிழைப்பிற்காகப் போட்டு இருக்கிற வேடம் இந்தப் பிச்சைக்காரனத்தனம். இதனை நான் நினைத்தால் நாளைகூட கலைத்துவிடுவேன். ஆனால் உண்மையான பிச்சைக்காரர்களை நான் உங்களுக்கு அடையாளம் காட்டுகின்றேன் என்று தேவதூதனை அழைத்துக்கொண்டு ஒரு கோயிலுக்குச் சென்றான். அதன் வாயிலில் போய் நின்றான். போகும்போது ஒருவரிடம் ஐயா தர்மம் பண்ணுங்கள் என்று கூறினான். கோயிலுக்குச் சென்றவரோ வரும்போது தருகிறேன் என்றார். தேவதூதனை அவரது அருகில் நின்று கவனியுங்கள் என்று பிச்சைக்காரன்; கூறினார்

மீண்டும் அவர் கோயிலிருந்து வந்தபோது பிச்சைக்காரன் அவரிடம் பிச்சை வாங்க மறுத்துவிட்டான். காரணம் ஒரு ரூபாய் எதிர்பார்க்கிற ஒருசிறுபிச்சைக்காரன் பலதை இறைவனிடம் பிச்சை கேட்ட பெரிய பிச்சைக்காரனிடம் தர்மம் கேட்பது முறையற்றது என்றான். தேவதூதன் புரிந்து கொண்டான் காரணம் அவன் கோயிலுக்குள் சென்று கடவுளே எனக்கு சுகம் கொடு, பணம்கொடு, புகழ்கொடு என்று தொடர்ச்சியாகப் பிச்சை கேட்டுக்கொண்டிருந்ததை தேவதூதன் கவனித்தான் இப்போது தேவதூதன் குழம்பிப்போனான் உண்மையான பிச்சைக்காரர்கள் இவர்கள்தானோ! என ஒருநிமிடம் யோசிக்க ஆரம்பித்தான்.

பிறகு தேவதூதனை அழைத்துக்கொண்டு பிச்சைக்காரன் வீதிக்கு வந்தான் அங்கு ஒரு போக்குவரத்து நெறிசல் தேவதூதன் பிச்சைக்காரனைப் பார்த்து இதென்ன குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு செல்வதும் குழந்தைகளைச் சுமந்து கொண்டு வாகனமும் செல்கிறது எங்கு செல்கிறது? என்று கேட்டார். இவர்கள் தொடர் பிச்சைக்காரர்கள். தொடக்கத்தில் தாங்கள் குழந்தைகளுக்குப் பள்ளியில் இடம்வேண்டும் என பிச்சையெடுத்தார்கள். இப்போது கல்விவேண்டும் என பிச்சை கேட்டு அலைகிறார்கள் இந்தக்குழந்தைகள்? இவர்கள் குழந்தைப் பிச்சைக்காரர்கள். இவர்கள் ஆசிரியர்களிடம், மதிப்பெண் என்ற பிச்சையைக் கேட்டு மண்டியிட்டுக்கிடக்கிறார்கள். அப்படியென்றால் அந்த நிறுவனம் வசதிதானே! என தேவதூதன் கேட்கிறான். ஐயோ அது பெரிய பரிதாபம். அவர்கள் நன்கொடை என்ற பெயரிலே பெற்றோரிடம் பிச்சையெடுத்துத்தான் கட்டடமே கட்டுகிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றுக்கும் பீஸ் என்ற பெயரிலே பிச்சையடுத்துத்தானே பிழைப்பு நடத்த வேண்டியிருக்கிறது.

ஐய்யய்யோ, இது என்ன? இப்படி உலகம் இருக்கிறது! என்று ஆச்சரியமாகக் கேட்டான் தேவதூதன் இதுமட்டுமா! அதோ ஒரு கூட்டம் வருகிறதே அவர்கள் அரசியல்வாதிகள் அவர்கள் மக்களிடம் ஓட்டுப் பிச்சை கேட்கும் மாண்புமிகுக்கள். நாங்கள் ஒவ்வொருவரிடமும் அம்மா! தாயே! என்போம் அவர்கள் ஒட்டுமொத்த ஊரையும் அழைத்து வைத்து அம்மா தாயே என்பார்கள். நாங்கள் பிச்சை கேட்கும்போது அதிகபட்சம் கெஞ்சி கேட்போம். அவர்கள் காலில் எல்லாம் விழுந்து பிச்சை கேட்கும் கன்றாவிகளைப் பாருங்கள்.

சரி இவர்களை ஆட்சியாளர்கள் அரசுத்துறையில் உள்ளவர்களும் சரிசெய்யலாமே. அவர்கள் பகட்டாக ஆடை ஆணிந்துவரும் பகல்பிச்சைக்காரர்கள், யார் வந்தாலும் கைநீட்டும் எப்பணிசெய்யவும் காசு கேட்கும் அதிகாரப்பிச்சைக் காரர்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் இந்த வகைப்பிச்சைக் காரர்கள்தான். உடனே தேவதூதன் விடவில்லை. சட்டம் ஒழுங்கை வைத்து அதனைச் சரிசெய்ய வேண்டியதுதானே என்றான். அதோ எங்கள் சட்டம், வழியில் நின்று வாகனச் சோதனை என்ற பெயரில் வசூல் செய்ய கையேந்திக் கொண்டிருக்கிறார்களே இதனை நான் என்ன சொல்ல நீங்களே புரிந்து கொள்வீர்கள் எனப் பிச்சைக்காரன் கூறினார்.

உடனே தேவதூதன் விடவில்லை இதற்கெல்லாம் ஒரே விடிவுதான் இருக்கிறது. இளைஞர்களைத் திரட்டி ஒரு முடிவு கட்டவேண்டியதுதானே! எங்கள் இளைஞர்கள் அரசிடமும், நிறுவுனங்களிடமும் வேலைப்பிச்சைக்கேட்டு அல்லவா வீதியில் நிற்கிறார்கள். சில இளைஞர்கள் அந்நிய தேசத்திற்கு அடிமைப்பட்டுக்கிடக்கிறார்கள். சோதிடக் கிளியாக அவர்கள் வாழ்க்கை சுரூண்டு போய்விட்டது. சோற்றுக்காய் தன்னையே அடைத்துக் கொண்டவர்கள் தன் எஜமான் இடும் கட்டளைக்குச் சீட்டு எடுத்துக் கொடுக்கும் பணியைச் சிறப்பாகச் செய்கிறார்கள் என்றவுடன் தேவதூதன் மிரண்டு போனான்.

அவர்கள் அதனைக்கடந்து நடந்துவரும்போது ஒரு கல்யாண மண்டபத்தைப் பார்த்தபோது தேவதூதன் பிச்சைக்காரனை அழைத்து வா உணவருந்திவிட்டுப்போவோம் என அழைக்கிறான். ஐயோ இவர்பெரிய பிச்சைக்காரர்கள் இவரிடம் சென்றா யாசகம் கேட்பது? என்கிறார் பிச்சைக்காரர். இங்குமா பிச்சை? என தேவதூதன் ஆச்சிரியமாகக் கேட்க! மணமகன் வீட்டார் மணமகள் வீட்டில் மடிப்பிச்சையேந்தி வரதட்சினை என்ற பெயரில் வாங்கிக்குவிப்பார்கள். மணமக்களை வாழ்த்த வருகிறார்கள் என்று சுற்றம் சூழ வந்து மொய் என்ற பெயரில் அவர்கள் கொடுத்துவிட்டுப் போகும் கௌரவப் பிச்சையை இவர்கள் கணக்குப் வைத்திருப்பார்கள். ஏனென்றால் இது கடன் பிச்சை என்றாவது ஒருநாள் இது கணக்குத் தீர்க்க வேண்டிய பிச்சையாகும். இலவசத்திற்குக் கையேந்துவது, வங்கிலோனுக்கும் கையேந்துவது, நிவார்ண நிதிக்குக் கையேந்துவது ரேசன் கடைகளில் கையேந்துவது, கடவுளிடம் கையேந்துவது இப்படிக் கையேந்தி;க் கையேந்தியே எங்கள் கரங்கள் மரத்துப் போய்விட்டது பிச்சைக்காரர்களில்தான் எத்தனை அவதாரங்கள்! ஐயோ இதனைப் போக்க என்னதான் செய்ய என்ற தேவதூதனுக்கு தூரத்தில் துறவிகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டதும் நம்பிக்கைத் துளிர்விட்டது துள்ளி எழுந்தான். அவசரமாக அருகில் இருந்த பிச்சைக்காரனை அழைத்தான். அவர் உணர்வுகளைப் புரிந்து கொண்ட பிச்சைக்காரர் அவசரப்படாதீர்கள் அவர்கள் அனைவரும் ஒரு சங்கமத்திற்காக தாங்கள் தலைவரைப் போய்ப்பார்க்கப் போகிறார்கள். அங்குபோய் என்ன செய்யப்போகிறார்கள் அந்தப்பதவியைக் கொடு, இந்தப் பொறுப்பைக்கொடு, அந்தநிறுவனத்தைக்கொடு என்று அதிகாரப் பிட்சைக் கேட்க ஆன்மீகத்தோடு போகிறார்கள் என்று அசால்டாகச் சொன்னார் பிச்சைக்காரர் தேவதூதனுக்கு தலைசுற்ற ஆரம்பித்தது. அப்படியென்றால் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தானா? எந்தப்பிச்சையை ஒழிப்பது? அதனை யார்தான் ஒழிப்பது? என குழம்பிப்போனான்.

நாம் எல்லோருமே பிச்சைக் காரர்கள்தான் தாய் தந்த பிச்சையில் பிறந்தோம்! தந்தை தந்த பிச்சையில் வளர்ந்தோம். ஆசான் தந்த பிச்சையில் நம்மை உணர்ந்தோம் இது தவிர்கள் முடியாத ஒன்று தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும் என காலம் முழுவதும் கையேந்த வேண்டுமா?

கோயிலுக்குச் செல்வோம் வரங்களையும், வளங்களையும் கேட்க கையேந்த வேண்டாம். கடவுளையே கேட்போம் களிப்புத் தானே வரும்.

தலைவர்களைச் சந்திப்போம் பதவியைக் கேட்பதற்கல்ல, தலைவரிடமே கேட்போம் நாம் என்ன பணி செய்ய வேண்டும்.

கல்விநிறுவனங்களுக்குச் செல்வோம். குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க அல்ல, குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள நம் குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது இதுபோதுமா? இன்னும் கற்றுக் கொள்வதற்கு வேண்டுமா!

தினவெடுத்து இனத்தோடு சேர பெண்ணுக்குக் காசு கொடுத்தால் அதன்பெயர்…. ஆனால் ஆணுக்குக் காசு கொடுத்தால் அது திருமணமா!

ஆசை அதிகமானால் தேவை அதிகமாகும் தேவை அதிகமானால் தேடுதல் அதிகமாகும், தடமில்லாத பாதையிலும், தாறுமாறான வழிகளிலும் சென்று நம் எண்ணங்களைப் பூர்த்தி செய்தால் யாருக்கு என்ன இலாபம்?

நாம் நிறைவாயிருந்தால்தானே பிறரை நிரப்ப முடியும்! நாமே பிச்சைக்காரராய் இருந்தால் பிறகு எப்படி உலகில் பிச்சையைப் போக்க முடியும்?

தூரத்தில் ஆலயத்தில் வாசிக்கப்படும் விவிலிய வார்த்தை கேட்டது. “குருடர்களே குருடர்களுக்கு வழிகாட்ட முடியுமா?

Birth Days :-
06 th Bro. P.Simon Rayer
15 th Bro. U.Jesuraj
19th Bro. A. Mariadas
19th Bro. M. Prusulin
22 nd Bro. C.M.Felix

Feast Day :-
21st Bro. M.V. Cherian Manikathan

ARCHIVES