17

Apr

2014

சிற்பிகளைச் சேகரிக்கிறேன்….

“நேற்று வரை நான் இரசித்து மயங்கியிருந்த நட்சத்திரங்களை மறந்து போனேன். இன்று என் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்த  மலர்ந்த ஒற்றை ரோஜாவைப் பார்த்த பிறகு” என்ற என் வார்த்தைகள் இதயக்கடலில் அலையாய் எழும்பித் துடிக்கிறது. எத்தனையோ காவியங்களையும், காப்பியங்களையும், தத்துவங்களையும், வாழ்வியலையும் மறந்துபோய்விடடேன். இந்தப் படைப்புகளில் என் விழிகள் பயணித்தபிறகு… இவைப் படைப்புகளா! இல்லை இந்தப் பாருலகை செப்பனிட வந்த உடைப்புகளா? எனப் பரவசமடைகிறேன். ஓவ்வொரு படைப்புகளையும் தனது எண்ணத்தில் கருவாக்கி கைவண்ணத்தால் காகிதத்தில் இறக்கிய இந்தச் சிந்தனைச் சிற்பிகளை என் இதயத்தில் சேகரித்து வைக்கிறேன்.

சந்தைவெளியைப் போல் சலசலத்துக் கொண்டிருக்கும் இந்தச் சமுதாயத்தில் தவத்திற்காய் இடம் தேடும் ஒரு முனிவனைப் போல் என் மனம் தனித்து நின்று சிந்திக்கும்போது இந்த மானுடம் அசுத்தச்சேற்றை அள்ளித் தெளித்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறதே அதனையார் சொல்லித் தெளியவைப்பது? எதனைக் கொண்டு மனமாற்றுவது? எப்படி மாற்றியமைப்பது? எதனால் மறுமலர்ச்சி விதைப்பது? என எனக்குள் எழுந்த பல்வேறு கேள்விகளுக்குப் பதிலாய் வந்தது தான் இந்தப் “உளிகள் சிந்தும் துளிகள்”.

ஏனென்றால் வார்த்தை என்ற உளிகள்தான் மானிடச் சிற்பத்தை சரியாய் செதுக்கியது. புத்தனின் போதனையும், இயேசுவின் வழிகாட்டலும் சாக்ரடீஸின் கேள்விகளும், அரிஸ்டாட்டிலின் தத்துவங்களும் இல்லாது போயிருந்தால் இந்தப் ப+மி எப்போதோ காணமல் போயிருக்கும். இந்தப் ப+மிப் பிரபஞ்சம் பாழ்பட்டுப் போகாமல் காலமெல்லாம் காத்து நிற்க வாள் போன்ற வார்த்தைகள் பலமுறை தன்னைச் சுழற்றியிருக்கிறது.

பாவ வாழ்க்கையில் பழகிப்போன புனித அகுஸ்தினார் “எடுத்துவாசி” என்ற வார்த்தைதானே அவரை யோசிக்க வைத்தது அவரையே நம்மை வாசிக்க வைத்தது உலகமாயையில் மயங்கி நின்ற சவேரியாரை “உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் பயனென்ன”? என்ற வரிகள் அவரை மாற்றியதால் இன்று அகிலமே அவரிடம் மயங்கி நிற்கின்றது.

போராடும் குணமும், புரட்சியை விளைவிக்கும் மனமும் கொண்ட போர் வீரன் இஞ்ஞாசியரின் காலில் அடிபட்டவுடன், மருந்துவமனையில் அவருக்கு காலுக்கு வைத்தியமாக மருந்தையும், மனதிற்கு வைத்தியமாக இறைவார்தத்தையும் கொடுத்ததும், இறைச் சாம்ராஜ்ஜியத்தின் இளைய தளபதியாய் மாறிவிட்டாரே!

இச்சின்னஞ்சிறிய சகோதரருக்குச் செய்த தெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற வார்த்தைதானே ஒரு சிறிய பெண்துறவியை அகிலமே வியந்து பார்க்கும் அன்னைத் தெரசாளாக மாற்றியது.

இப்படி எத்தனையோ மாற்றங்கள் எத்தனையோ ஏற்றங்கள் அத்தனையும் இந்தப் ப+மிப் பிரபஞ்சத்தைப் புரட்டிப் போட்ட வார்த்தை நெம்புகோல்களே என்று வாசிக்கின்ற உள்ளங்களுக்குத் தெரியும்.

இத்தனையும் ஏதோ இதிகாசத்தில் நடந்தாக எண்ணி விடாதீர்கள். இத்தனையும் தனக்குள் அடக்கிப் பல்வேறு உள்ளங்ளுக்குள் படுத்துக் கிடந்த இந்தக் கருத்து ஓவியம் தூசி தட்டப்பட்டு, தூரிகையைத் தூக்கிக் கொண்டு இன்று எங்கள் தொட்டிலுக்கு வந்திருக்கிறது. இவைதான் எங்களவர்களின் இதயம் கசிந்த “உளிகள் வடித்த துளிகள்”.

இது பொழுதுபாக்கு நூலல்ல சமுதாயத்தைப் பழுதுபார்க்கவும், நம்மைச் சரியாய் உழுது பார்க்கவும் சரியாய் கையாளப்பட்ட சாம் ராஜ்ஜியத்தின் உளிகள்.

இந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள் அது உங்களை புரட்டிப் பார்க்கும் கத்தியின்றி ரத்தமின்றி உச்சரித்துப் பாருங்கள் அகிம்சை ஊற்றெடுக்கும் “அச்சமில்லை அச்சமில்லை” சொல்லிப் பாருங்கள் புத்துணர்ச்சி பிறக்கும்” அதுபோல் “உளிகள் சிந்தும் துளிகள்” படித்துப் பாருங்கள் மானுடம் மறுபிறவி எடுக்கும், மறுமலர்ச்சி கொடுக்கும்.

இவர்கள் எடுத்திருக்கிற விதையும், தொடுத்திருக்கிற வார்த்தைகளும் பழையது தான் பழகியது தான் என்றாலும் இவர்களது பாணி (ளுவலடந) நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
ஓவ்வொரு தலைப்பின் கீழும் இவர்கள் வடித்துள்ள கருத்துக்களை என் கண்கள் மேய்ந்து வரும்போது எனக்குள் எழுந்த கேள்வி இவர்கள் வைத்திருப்பது எழுதுகோலல்ல! சிற்பி கல்லிலிருந்து சிலையைத் திறக்கின்ற (உளி) திறவுகோல் ஆகும். ஒவ்வொரு தலைப்பிலும் இவர்கள் கருத்துக் குதிரையை ஒட விட்டு முத்தாயப்பாய் முடித்திருக்கிறார்கள்.

இந்நூல் வாசிப்பதற்காக வடிக்கப்பட்ட வாழ்வியல் நூலல்ல, மானிடச்சமுதாயம் சுவாசிப்பதற்காகக்; கொடுக்கப்பட்ட புதிய கீதாச்சாரம்.

புத்தனுக்கு ஒரு போதிமரம் போல, இயேசுவுக்கு ஒரு சிலுவை மரம் போல வருகின்ற தலைமுறைக்கு வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு புத்தகம் இந்த “உளிகள் வடித்த துளிகள்” இது படிக்கின்ற யாருக்கும் பகவத் கீதையாக இருக்கும்.

“கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்ததுபோல” என்று கிராமத்தில் சொல்வார்களே அதேபோல இதுவரை மானிடச் சமுதாயம் தன்னுடைய திறன்களைத் தானே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்ததைத் தடம் காட்ட தக்க சமயத்தில் காகித வடிவில் கண்ணெதிரே வந்திருக்கும் நூல்.

மலைப்பொழியில் இயேசு திருவாய் மலர்ந்த, நபிகள் நாயகத்தில் நல் உரையில் விழுந்த, அர்ஜீனனுக்கு கண்ணன் அருளிய சாரம் சங்களிலிருந்து சாறு பிழிந்தது போல் வாசிப்பவர்களை அப்படியே வாழ்க்கைத் தடத்தில் நிறுத்தும்.

இதனை வாசித்து முடித்த பிறகு எனக்கு ஒன்று தோன்றுகிறது “போதிமரமென்ன புளியமரம் கூட ஞானத்தைத் தரும் ஆனால் இருப்பவன் கையில் இந்தப் புத்தகம் இருக்க வேண்டும்”
படியுங்கள்! வாழ்வின் படிக்கட்டுகல்; தெரியும்

நூலைப் புரட்டிய கரத்தின் புனிதத்தோடு…
வாங்க! வாசிக்கயிருக்கிற இதயங்களை வாழ்த்தி…

என்றும் அன்புடன்
அருட்தந்தை Y.S.யாகு சே.ச
தலைமையாசிரியர்
தே.பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி
தேவகோட்டை.

ARCHIVES