27

Mar

2016

கண்ணாடி

கண்ணாடி முன்னாடி நிக்காத மனிதர்களே இல்லையென்று கூறிவிடலாம். அதுவும் பருவக்காலத்தில் நாம் அடிக்கடி சந்திக்கும் ஆத்மநண்பன் அவன். நம் இல்லத்தை விட்டு எங்குசென்றாலும் கண்ணாடி முன் நின்று தன்னை சரிசெய்து கொள்ளமால் எவரும் வெளியில் சென்றதில்லை. ஏனென்றால் பிறர்முன் நாம் தோன்றும் போது குறையுள்ளவர்களாவோ, கறையுள்ளவர்களாகவோ தோன்றிவிடக்கூடாது. அப்படித் தோன்றினால் பிறர் முன் நமது மதிப்பையும், மாண்பையும் இழக்க வேண்டியது வரும் என்று எண்ணுகிறோம். சரிதான் நம்மை சரிசெய்ய வேண்டியதும் அவசியம் தான்.

ஆனால் வெளித்தோற்றங்களையே சரிசெய்தே பழக்கப்பட்டுவிட்டோமே! உட்புறத்தை எப்போது உற்றுக் கவனிக்கப்போகிறோம். இயேசு இதைத்தான் சொன்னார். கிண்ணத்தின் வெளிப்புறத்தை மட்டும் செய்வதால் என்ன பயன்.? அதன் உட்புறமல்லவா நாம் உண்ணும் பொருளோடு தொடர்பு உடையது. அதன் மூலமாக உடலுக்குள் செல்லும் பொருள் உடலைக் கெடுத்து விடக்கூடாதல்லவா?

எனவே கண்ணாடி முன்னால் நின்று தன்னைச் சரிசெய்து கொள்வதால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் உட்புறத்தைச் சுத்தப்படுத்தினால்தான் பழகுவதற்கு, இனிமையாக இருக்கும். அப்படியென்றால் உள்ளத்தைப் பார்க்கும் கண்ணாடி எது? என்று ஒரு கேள்வி வருகிறது. என்னைப் பொறுத்த மட்டில் நம்மீது அன்புகொண்டு நமது குறைகளைப் பக்குவமாய் எடுத்துச் சொல்லி திருத்த வைத்து பலருக்கு முன்னால் நம்மை நல்லவர்களாக நடமாடவிட்டிருக்கிறார்களோ அந்த நல்ல உள்ளங்கள் தான் நம்மை பார்க்கும் கண்ணாடிகள்.

மனிதன் தன்னைக் கண்ணாடியில் பார்த்து பழகிக் கொண்டான். ஆனால் மனிதன் முதன்முதலில் தன்னை எங்கே பார்த்தான் தெரியுமா? தண்ணீரில்தான் தன்முகம் பார்த்தான். பார்த்து அஞ்சினாhன். நடுங்கினான். பயந்து ஓடினான். ஆனால் படிப்படியாக தன்னைப் பார்க்கப் பழகிக்கொண்டான். ஆனால் இன்றளவும் அவன் வெளித்தோற்றத்தைப் பார்க்கவே ஆசைப்படுகிறான். உட்புறத்தைப் பார்க்க அவன் ஒரு போதும் துணிந்ததில்லை. ஆனால் அடுத்தவர்களின் அந்தரங்கத்தின் இவனது அந்தப்புறம்போல் உலவி வருவான் செய்தி சேகரிப்பான் வதந்தி பரப்புவான், சுட்டிக்காட்ட எண்ணுவான் ஆனால் தன்னை ஒருபோதும் கண்டுதெரிய எண்ணமாட்டான். இதனைத்தான் இயேசுசொன்னார். உன் கண்ணிலுள்ள விட்டத்தைப் பார்க்காமல் அடுத்தவர் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க ஆலோசனை சொல்வது ஏன்? என்பார்.

வாழ்க்கையை ஒருமுறை புரட்டிப்பாருங்கள் அம்மா, அப்பா, ஆசிரியர், நண்பர், தலைவர்கள், நம் தோழர்கள் இவர்களெல்லாம் எப்போது நமக்கு எதிரிகளானார்கள். நமது தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது தானே இவர்களை விட்டுவிலகி, விலகிவந்து இன்று சத்தியப்பாதையை விட்டு சற்று விலகித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் எத்தனை முகமூடிகள் எத்தனை வேஷங்கள், எத்தனை நடிப்புகள் இதுதானே நமது வாழ்க்கை நமக்கே நம்மை உள்ளுக்குள் பார்க்க அசிங்கமாக இருக்கும் அதற்குத்தானே நாம் உற்றுப்;பார்க்க மறுக்கிறோம்.

ஏரோதுகூட எத்தனையோ முறை அருளப்பரின் வார்த்தையைக் கேட்டு மனம் கலங்கினான். ஆனால் கடைசிவரை மனம் திருந்தாததால் தீர்ப்புகள் திசைமாறியது பாவங்கள் வாழ்க்கையானது இறைவனின் சாபத்திற்கு ஆளாகினான். அதுதான் நம் வாழ்க்கையிலும் நடக்கிறது நமது தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களை விட்டு திரும்பி வந்துவிடுவோம் இல்லையென்றால் அவர்களைத் தீர்த்துக்கட்ட எண்ணிவிடுவோம்.

இன்றைய உலகில் பிறரது குறைகளைச் சுட்டிக்காட்டுகிற நேர்மையான அதிகாரிகள் படுகின்ற பாடுகள்தான் தெரியுமே. எத்தனை இடமாற்றங்கள், எத்தனை உயிரழப்புகள், எத்தனை பழிவாங்கள்கள். இவையெல்லாம் எண்ணிப்பாருங்கள் எங்கோ யாருடைய தவறுகளையே சுட்டிக்காட்டப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளாகதான் இருக்கும்.

தவறுகளைச் சுட்டிக்காட்டிய ஒரு காரணத்திற்குதான் ஸ்நாபக அருளப்பர், இயேசு, தோமையார், அருளானந்தார் என்ற அரசியல் படுகொலைகள். இன்றளவும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிற ஒருவரைத் தலைவராக ஏற்ற இளைய சமூதாயம் தயாராக இல்லையே அத்தனை தகுதிகளும் அவருக்கு இருந்தலும் அவரை எப்படியாவது தடுத்துவிடவேண்டும். அவர் பெயரைக் கெடுத்துவிடவேண்டும். என்றுதானே எண்ணுகிறோம். இன்றைய இளைஞர்கள் யாரைத் தலைவர்களாக எதிர்பார்க்கிறார்கள். தன் தவறுகளைத் தட்டிக்கேட்;காத அனைத்திற்கும் ஆமாம் சாமி போடுகின்ற ஒருவரைத்தானே இன்று தலைவராக்கத் துடிக்கிறார்கள். ஏனென்றால் எனது இளைஞன் எப்போதோ தன்னைத் தொலைத்துவிட்டான் அவன் இதயத்தையும், மனச்சாட்சியையும் எங்கேயோ இறக்கி வைத்துவிட்டு சுடுகாட்டில் திரியும் ஆவியாக இப்போது சுற்றிக்கொண்டிருக்கின்றான்.

இந்தக்கூட்டத்தில் ஒருவராக நாம் இருக்கக்கூடாது என்று எண்ணினால் வெளித்தோற்றத்தைக் காட்டும் கண்ணாடிபோல் உள்ளக் கருத்தை உள்ளபடி சொல்லும், நண்பர்கள், தலைவர்கள், பெற்றோர்களுடன்தான் நாம் பயணிக்க வேண்டும். தனிக்குடித்தனம்தான் நம்மை பலநேரம் தான்தோன்றித்தனமாக மாற்றிவிட்டது. கூட்டுக்குடும்பம் இருந்து நம்குறைகள் சுட்டிக்காட்டப்பட்டு நம் தவறுகளிலிருந்து மீட்டு வர அவர்கள் பக்க பலமாக வைத்து நம்மை நாமே மீட்டெடுக்கப் பக்குவப்படவேண்டும். உயிரற்ற கண்ணாடி காண்பிப்பதை உடனே திருத்திக்கொள்கிறோமே! நம் முன்னாடி நிற்கின்றவர்கள் சொல்வதற்கு நாம் ஏன் விளக்கம் சொல்கிறோம் திருத்தமறுக்கிற திமிர்வாதம்தானே.

நல்ல நண்பர்கள் நமக்கு அகம்பார்க்கும் கண்ணாடிகள். அவர்கள் நம்மை சுற்றி இருக்கிறவர்களோ இல்லைNயுh நாம் கண்டிப்பாக அவர்களைச்சுற்றி இருக்க வேண்டும். பொழுதுபோக்கிற்காக, போதை நேரத்திற்காக சுற்றுகிறவர்களை நண்பர்கள் என்று ஏமாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒத்த கருத்துக்களுக்காக உடன்பயணித்தவர்கள் கருத்து மாறும்போது அவர்கள் பாதையும் மாறிவிடும் அவர்களைக் கண்டு கொள்ளுங்கள். நண்பன் போல நம்மை நம்ப வைத்தவர்கள் காதல் வரும்போது, பதவிவரும்போது, பணம், புகழ், அந்தஸ்து வரும்போது முகம் என்று நாம் நினைத்த அவர்களது முகமூடி கழன்று விழும்போது நமக்குள் ஒரு வலி வருகிறதே அதற்குப் பதில் என்ன? அவர்கள் ஏமாற்றி விட்டார்களா? இல்லை நாம் ஏமாந்து விட்டேமா? பதில் யாருக்கும் தெரியாது இத்தனையும் கடந்து நம்மீது அன்பு கொண்டவர்கள், எதையும் எதிர்பாராமல் நம்மை அன்பு செய்கிறவர்கள் நாம் சொன்ன வார்த்தையை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிறைவேற்றுகிறவர்கள். நம் நிறை குறைகளை சகித்துக்கொண்டு பயணிப்பவர் பலர் நம்மோடு பயணிக்கிறார்கள். அது பெற்றோராய் இருக்கலாம், தலைவராய் இருக்கலாம், நண்பராய், உடன்பிறப்பாய் இல்லறஉறவாய,; குழந்தைகளாய் நம்மோடு பயணிக்கிறார்கள். நாம் மறந்திருப்போம் இவர்களை மீண்டும் எண்ணிப்பார்ப்போம். நாம் மீண்டுவர உதவியாய் இருப்பவர்கள் இவர்கள்.

இவற்றிலிருந்து இன்னும் ஒருபடி மேலே சென்று நம்மை வழிகாட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். காஷ்மீரில் விளைந்த ஆப்பிள் கன்னியாகுமரியில் அனாதை இல்லத்தில் வாழும் ஒரு வயதானவருக்குக் கிடைக்க வேண்டும் என்று விதி இருக்கும் போது அது நடந்துதான் ஆகும். அதே போல் விலைமதிப்பில்லாத தலைவர்கள், ஆசிரியர்கள் நமது வாழ்க்கையையும் கடந்து சென்று இருப்பார்கள். நல்ல நண்பர்களிலும் அருகில் இருப்பார்கள். அவர் சொன்ன வார்த்தைகள் அப்போது மறுத்திருந்தாலும் எப்போதும் மறக்காமல் இப்போது கடைபிடிக்கலாம். தவக்காலப் பிரசங்கம் கேட்டவுடன் காவி உடுத்துகிறோம். சாம்பல் பூசுகிறோம். விரதம் இருக்கிறோம். வேளியில் எத்தனை மாற்றங்கள் உள்ளுக்குள் மாறாமல் உள்ளத்தை மாற்றாமல் வெளியில் மட்டும் மாறினால் அது வெளிவேசம் தான். நாமும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்தான். நல்ல நண்பர்கள் நம்மை மாற்றுவார்கள் நல்ல வழிகாட்டுவார்கள் என்று தொடக்கத்திலிருந்தே இக்கட்டுரையில் சொல்லி வருகிறேன். இறுதியாக ஒன்று சொல்லுகிறேன். நாமும் நல்ல நண்பர்களாக இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நண்பருக்காக உயிரைக்கொடுப்பதை விட மேலான அன்பு இல்லை என விவிலியம் சொல்கிறது ஆனால் உயிரைக் கொடுக்கும் அளவிற்கு இன்று நண்பர் அமையவில்லை என்ற அங்கலாய்ப்புத்தான் அதிகமாகத் தெரிகிறது. யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞசம் உண்டு என புண்பட்டுப் போன இதயங்களின் புலமபல்களும் கேட்கத்தான் செய்கிறது. ஆகவே நமாவது நல்ல நண்பர்களாக இப்N;பாது பொழுது போக்கிற்காக உடனிருக்காமல் நம்மை நாமே பழுதுபார்க்கும் நண்பர்களாக இருப்பான்.அடுத்தவர் அகம் காட்டும் கண்ணாடியாய் அவன் முன்னாடி நிற்போம். முகமூடி அணியாம கற்பனை வார்த்தைகள்கூட துன்ப நேரங்களில் விலகாத எதற்கும் நண்பனை இழக்காத இதயம் கொண்டு வாழுவோம்.

ARCHIVES