06

Oct

2014

உறவோடு உறவாட….

ஓடிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஒரு நிமிடம் இந்தச் சமுதாயத்தை மனக்கண்முன் நிறுத்திப் பார்க்கும் போது தூரத்தில் இருந்து பார்க்கும் போது தோப்பாகக் தெரியும் இச்சமூகம், பக்கத்தில் வரும்போது தனித்தனி மரமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

இந்தப் பிரபஞ்சம் தோன்றிய காலமுதல் உயிர்களின் ஒவ்வொரு பரிணாம வளர்;ச்சியையும், அறிவியலும் ஆன்மீகமும் தனித்தனியாகத் தன் கருத்துக்களை மனிதனின் அறிவுப் பசிக்கு ஏற்ப பரிமாறிக் கொண்டிருக்கின்றன. அவரவர் நிலைக்கேற்பவும், அவரவர் தேடலுக்கு ஏற்பவும் தேடி எடுத்துக் கொள்கிறார்கள். ஆயினும் வரலாறு நமக்கு என்ன சொல்கிறது? எல்லோரும் மொத்தமாக நோக்கும் போது எதிர் படுவது என்ன?

மனிதனின் தோற்றத்தைப் பற்றி இதிகாசங்களும், அறிவியலும் வேறு விதமாக வரலாற்றினை வாசிக்கிறது இருப்பினும் மனிதன் தோற்றம் தனிமையாய் ஆரம்பிக்கிறது. ஓவ்வொறையும், தானே தனக்குள் கேள்வி எழுப்பி அதற்கு விடைதேடும் முகமாக ஒரு தேடலாகவே தனது வாழ்க்கைப் பயணத்தைப் பயணிக்கிறான். தேடல் தோல்வியடையும் போது அதனைத் தற்சமயம் ஒத்தி வைக்கிறான். தோல்விக்கான காரணத்தைக் கண்டு பிடித்து வெற்றியடைவதற்குச் சாதகமான சூழ்நிலைகளில் தன்னைத் தயாரித்துக் கொண்டு வெற்றியடைய முயல்கிறான்.

இவ்வாறு தொடர்கின்ற அவனது பயணத்தில் பல்வேறு மோதல்கள், முட்டல்கள், ஒட்டல்கள், உரசல்களில் வேதனைகளோடு கூடிய சாதனைகளை விளையவைக்கிறான். இருப்பினும் அவனுக்குள் இயற்கையோடு ஒரு பய உணர்வு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இயற்கையோடு இணைந்த வாழ்வு அவனது வாழ்வு, அதிலிருந்து பிரியவும் முடியாது. பிரிக்கவும் முடியாது ஆனாலும் இயற்கையின் சீற்றங்கள் அவனிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனைக் கண்டு பயந்தான், புயல், காற்று, இடி, மின்னல், சூறாவளி, ஆழிப் பேரலை, கடல்கோள், என்பவையெல்லாம் அவனிடத்தில் மீளமுடியாத பயத்துடன் மிரட்டிக்கொண்டு இருந்தது.

சுற்றி வாழ்கின்ற உயரினங்கள் மூலமும் காயப்படுகிறான். இதனால் தனிமை அவனை வெறுமையாக்குகிறது. இதிலிருந்து தன்னை மீட்டெடுக்க அவன் எடுத்த அவதாரமே குழு வாழ்வு, கூட்டு வாழ்வு எனப்படும்.

இயற்கைக்குப் பயந்து, பல்வேறு உயரினங்களைப் புதிது புதிதாகச் சந்திக்கும் போதெல்லாம் தனக்குப் பக்கபலமாக தன்னைப்போல் இருக்கின்ற மானிடர்களோடு இனைந்து வாழ ஆசைப்பட்டான். பொது எதிரி உருவாகும் போதெல்லாம் இணைந்து செயல்பட ஆரம்பித்தவன், பொழுது போகாத போதும் பொழுதுகளை வெட்டியாகப் போக்கும்போதும், போட்டிகளின் போதும், தனது வலிமையைக் காட்ட எண்ணும்போதும், தன்னைப் பிறரை விட மேலானவனாக்க காட்ட நினைத்த போதும், பிறரை அடக்கியாள நினைத்த போதும், பிறரிடத்தில் தனது கருத்தைத் திணிக்க எண்ணுகிற போதும், குழுவுக்குள், மானிடருக்குள் ஒட்டல்கள், உரசல்கள் ஆரம்பித்தன.

அத்தகைய சூழ்நிலை ஏற்படும் போது மானிடன் அதனை அமுக்கி வைக்கமுயலவில்லை, தனக்குள்ளேயே அழித்து விடவும் எண்ணவில்லை ஏதாவது ஒரு வகையில் அதனை வெளிப்படுத்தி வருவான். சத்தமிடுதல், சண்டையிடுதல், கெட்ட வார்த்தைகளால் திட்டுதல், அடித்தல், காயப்படுத்துதல் கட்டிப் புரண்டு உருழுதல், ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல், பொருட்களை அழித்தல், வளர்க்கின்ற உயிர்களை அழித்தல் வளர்க்கின்ற உயிர்களைக் காயப்படுத்துதல் என ஏதாவது ஒரு வகையில் தன் கோபத்தைப் போட்டி மனப்பான்மையை, பொறாமைகளை வெளிப்படுத்தி விடுகிறான். அதன் விளைவுகள் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அழுகையின் மூலமாக, பிறரின் ஆறுதல் மூலமாக அதன் பாதிப்புகளை விரைவில் மறந்துவிட்டு மீண்டும் தனது பாதையை தனது போக்கில் அவன் சந்தோசமாகக் கொண்டு செல்கிறான்.

இப்படி வாழ்ந்த மானிடச் சமூகம் நாகரீகப் பாதையில் தனது வாழ்க்கையை நகர்த்தியது. இதில் கூட்டு வாழ்க்கை, கட்டமைப்பு வாழ்க்கையாக வடிவெடுத்து. ஆளுமைப் பண்புகளும் அதிகாரக் கட்டமைப்புகளும் உருவானது இதில் அதிகமானக் கட்டுப்பாடுகள் விதைக்கப்பட்டன. இதில் உணர்வுகள் பலநேரங்களில் சிதைக்கப்படுகின்றன. இங்கு மூத்தவர், இளையவர், தலைவர் தொண்டர், ஆண்டான், அடிமை, முதலாளி, தொழிலாளி என முன்மொழியப்பட்டன.

இதனால் மனிதன் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நினைத்த நேரத்தில் நினைத்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. சிலவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாவிட்டாலும் இயலாமையின் காரணமாக ஒத்துப்போக, ஒதுங்கிப்போக வேண்டிய நிலைக்கு மானிடன் தள்ளப்பட்டான் உணர்வுகளை வெளிப்படுத்த, கருத்துக்களைக்கூற, நினைத்தவற்றைப் பேச, வயது, பதவி, பணம், அந்தஸ்து தடையாக நின்றன. இதனால் மறைக்கப்பட்ட உணர்வுகள் மனதிற்குள் ஒருவித அழுத்தத்தைக் கொண்டுவர ஆரம்பித்தது.

வெளிப்படுத்தப் படுகின்ற கோபம் வடிகாலாகிவிடும். ஒருவேளை அதில் தவறு இருந்தாலும், மன்னிப்புக்கேட்பது, புன்னகைப்பது, உதவிசெய்வது, தானே சென்று பேசுவது போன்ற செயல்பாடுகள் அறுந்த உறவை சரி செய்து விடும். ஆனால் வெளிப்படாத கோபம் அடிமனதில் தங்கி விட்டால் அது வன்மமாக மாறிவிடும் அதன் வெளிப்பாடு ஏதோ ஒருவகையில் கொடுரமாக வெளிப்படும், அதன் தாக்கங்களும் மிகவும் பயங்கரமானதாக இருக்கும் அப்படியென்றால் கட்டமைப்பு வாழ்வில், நாகரீகப் போர்வையை
போர்த்திக் கொண்டு உலவும் இம் மானிடவாழ்வில் எப்படித்தான நம்மை வெளிப்படுத்துவது? இப்படித்தான் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிற கட்டுக்களை உடைத்தெறிந்து வெளிவரவேண்டும். நம்முடையை இதமான, சுகமான, செயல்பாடுகளால் பிறரின் இதயத்தைக்
குளிர்வி;க்க வேண்டும். இதற்கு நாம் விழாக்களைப் பயன் படுத்தவேண்டும்.

பிறந்தநாள் விழா, திருநாம (Feast day) விழா, கல்யாண விழா, பணியில் சேர்ந்த விழா, வெற்றியின் விழா, இந்த விழாக்களைப் பயன்படுத்தி “ஈகோ” களை வி;ட்டுவிட்டு இறங்கி வந்து பிறரோடு கை குலுக்குவோம், கட்டி அணைப்போம், பாராட்டுவோம் பரிசு வழங்குவோம். மற்ற அனைத்தையும், மறப்போம், மனதிற்கு பிடிக்காத நிகழ்வுகளை மன்னிப்போம் அதிகாரம், பணம், அந்தஸ்து அடிப்படையில், கண்மூடித்தனமாக, காட்டுமிராண்டித்தனமாக நடந்துவிட்ட நிகழ்வுகளைப் பொறுத்துக் கொள்வோம். போட்டி, பொறாமை, வன்மம், பழிவாங்கலை மனதில் வைத்துக்கொண்டு எப்படி நிம்மதியாக வாழ முடியும்? நிம்மதியைத் தொலைத்து விட்டு மானிட வாழ்க்கையில் மகிழ்ச்சி சாத்தியமாகுமா? மகிழ்ச்சியைத தொலைத்து விட்டு எங்கு போகப் போகிறோம் ஒரு பொன்னான வார்த்தை “மனதில் நிம்மதி வேண்டுமா? வுhழ்சில் சந்தோசம் வேண்டுமா உங்களை வெறுப்பவர்களுக்கும் அன்பு செய்யுங்கள” இயேசு கிறிஸ்து சொல்வார் உங்களைப் பகைப்பவர்களை அன்பு செய்யுங்கள் அதற்குத்தான் நீங்கள் பூமிக்கு வந்திருக்கிறீர்கள்.

உங்களின் பூமியின் வருகை, புதிய விடியலைத்தர அனைவரையும் அன்பு செய்யுங்கள்…. அன்பு தொடரட்டும், அன்பு வளரட்டும் வாழுங்கள் வாழ்த்துவோம், உறவோடு… உறவாடுவோம்.

உறவுகள் வாடாமல் பார்த்துக் கொள்ளுவோம். வாருங்கள் வாழ்வின்; அர்த்தம் முழுமைபெற பிறரை வாயார மனம் குளிர வாழ்த்துவோம், வளர்வோம், வளரட்டும், வளம் பெருகட்டும் .

வாழ்க! அன்பு! வளர்க உறவு!

ARCHIVES