30

Jul

2016

ஆங்கில மோ(மு)கம்

மெல்லத் தமிழினி சாகும் என்ற முண்டாசுக் கவிஞன் முன் மொழிந்தது இந்தக் கலிகாலத்தில் மெல்ல மெல்ல கரையேறிக் கொண்டிருக்கிறது. எங்கும் ஆங்கில மோகம் வீதிகளிலெல்லாம் ஆங்கிலப் பள்ளிகளின்; விளம்பரப் பலகைகள். ஆங்கிலம் கற்க பள்ளிகளில் சேர தமிழ் மாணவர்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசின் உதவிகள் எதுவுமே வேண்டாமென்று தகுதிக்கு மீறிய தொகையை சேகரித்துக்கொண்டு ஆங்கில வழிக்கல்வி கற்றுத்தரும் பள்ளிகளுக்கு பெற்றோர்களும், குழந்தைகளும் சிறகடித்துப் பறக்கின்ற நிலைமையை ஆழமாக யோசித்துப் பாருங்கள் பரிதாபமாக இருக்கும்.

ஆங்கிலம் கற்பதற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். ஆங்கிலம் கற்றுவிட்டால் எங்குபோனாலும் பிழைத்துக்கொள்வான். இதனைக் கேட்கும் போது நமக்கே சிரிப்புவரும். வயிற்றுப் பிழைப்பிற்கு கல்வி இல்லையே! கல்வி என்பது வாழ்க்கைக்கு அல்லவா அதனால் தான் பெரியோர்கள் சொல்வார்கள் படி பரிச்சைக்கு அல்ல வாழ்க்கைக்கு என்று. வாழ்க்கைக்கு அச்சூழல் எதைக் கற்றுக்கொடுக்கிறது.

தமிழ்வழிக்கல்வியில் தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித்திட்டம், சாரணர் இயக்கம், மாசுக்கட்டுப்பாடு, இலக்கியமன்றம் என பல்வேறு இயக்கங்கள் வைத்து நாட்டுப்பற்று, மொழிப்பற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு திறன்களை வாழ்க்கைக்கு உதவுவதுபோல் வளர்த்தெடுக்கிறார்கள். இவற்றி;ல் எதுவும் ஆங்கில வழிப்பள்ளிகளில் இல்லை என்பது தெரியுமா உங்களுக்கு, பல்வேறு இயக்கங்களை உருவாக்கி அவர்களுக்குள் கூட்டுணர்வை வளர்த்தெடுக்கிறார்கள.; ஆனால் ஆங்கில வழிக்கல்வியில் உணவைக்கூட தனித்தனியாக அமர்ந்து அவரவர் உணவை அவரவரல்லவா உண்கிறார்கள். இதைவிடக் கேவலமான ஒன்று உண்டு என்றால் பிள்ளைகள வீட்டுப்பாடம் பெற்றோர்களால் எழுதப்படுகின்ற அவலம்தான். இதெல்லாம் ஏதோ பள்ளியும், நிர்வாகமும் செய்வதல்ல. பெற்றோர்கள் விருப்பம் அதுவாக இருப்பதால் கல்வி நிறுவனம் அதற்கு கழுத்தை நீட்டுகிறது.

ஆங்கில வழிக்கல்வியில் மாணவனின் வீட்டு வாசலுக்கே சென்று அவனை பேரூந்தில் அழைத்துவந்து மீண்டும் வாசலுக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். இடைப்பட்ட தூரத்தில் இருக்கின்ற உலகம் அவனுக்கு எட்டா முகமாகிறது. அவனை சிறகுகள் விரிக்காத சித்தார்தனாகவே வளர்க்க ஆசைப்படுகிறீர்களா? புத்தனாக அவன் எப்போது புறப்பட்டுப் போகப்போகிறான். வகுப்பறை கற்றுக் கொடுப்பது மட்டும் அவன் வாழ்க்கைக்குப் போதுமா?

ஒரு தோட்டத்தில் ஒரு கீரைச் செடியும், ஒரு பருத்திச்செடியும் இருந்ததாம் கீரைச் செடியின் விதைகள் அந்தச் செடியை மட்டும் சுற்றி விழுந்து முளைத்து வளர்ந்து வந்ததாம். பருத்திச்செடியின் பஞ்சோ காற்றில் பறந்து பல இடங்களில் பரவிக் கிடந்ததாம். இதனைப் பார்த்து கீரைச்செடி பருத்திச் செடியிடம் என் குழந்தைகளைப்பார் என் பொறுப்பில் என் கவனிப்பில் எவ்வளவு பாதுகாப்பில் வளருகிறார்கள். உன்பிள்ளைகள் பொறுப்பில்லாமல் கண்ட இடத்திலும் வளருகிறார்கள் என்றதாம். காலம் கடந்தது சூழல் மாறியது பலத்த மழையில் அந்த பாத்தியில் இருந்த கீரைச்செடிகள் அழன்று மடிந்து போனது அந்த இனமும் அழிந்து போனது. ஆனால் அதே நேரத்தி;ல் அங்கு இருந்த பருத்திச் செடிகள் அழிந்தாலும் பரவிக்கிடந்த பருத்திச்செடிகள் பல்வேறு சூழலில் வளர்ந்ததால் ஒன்று அழிந்தாலும் மற்றொன்று வளர்ந்தது.

இதே போல்தான் அதிகபாதுகாப்பிலும், எப்போதும் அரவணைப்பிலும் வாழ்கின்ற குழந்தைகள் சூழல்மாறும் போது சொந்தக்காலில் நிற்கப் பழகாதநிலையில் சிலநேரம் தடுமாறுகிறார்கள், சிலநேரம் தடம் மாறுகிறார்கள். வாழ்க்கையை வாழத்தெரியமால் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இவையெல்லாம் காலம் கடந்து தெரிந்தாலும் அடுத்த தலைiமுறைக்கு இதனைச் சொல்ல ஏன் பெற்றோர்கள் முன்வருவதில்லை என்றுதான் எனக்குப் புரியவில்லை.

பெற்றோர்களின் வரட்டுக் கௌரவமும், முரட்டுப் பிடிவாதமும்தான் பிள்ளைகளுக்குப் பெரிய இழப்பைக் கொடுக்கிறது. சில பெற்றோர்கள் ஆசைப்பட்டு சேர்த்துவிட்டு பின்பு பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் பின்வாங்குகிறார்கள். சிலநேரம் அவமானப்படுகிறார்கள். இதனைக் காணுகின்ற குழந்தைகள் எந்த மனநிலையில் வளரும். தாழ்வு மனப்பான்மை தானே வந்து ஒட்டிக்கொள்ளும்தானே. அது சமுதாயத்தை எப்படிச் சந்திக்கும்? விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டாமா?

இதையெல்லாம் சொல்வதனால் நான் ஏதோ ஆங்கிலப்பள்ளிக்கு எதிரானவன் அல்ல. கற்கும் முறையையும், இதனைப்பற்றிக்கனவு காண்கின்ற பெற்;றோரையும் தான் சந்திக்க அழைக்கிறேன். னக்குத் தெரிந்த ஒரு ஆங்கிலப்பள்ளியில் அனைத்தும் ஆங்கிலத்தில் கற்றுக்கொடுக்கிறார்கள். ஆனால் அம்மா, அப்பா மட்டும்; தமிழிலே கற்றுத்தருகிறார்கள். அது அறிவின் வார்த்தை அல்ல நாம் அறிந்து கொள்வதற்கு அது உணர்வின் வார்த்தை. உணரத்தான் முடியும்; அதிர்ச்சி ஏற்பட்டாலோ, ஆபத்து ஏற்பட்;டாலோ, அடி விழுந்தாலோ அம்மா என்று நம்மை அறியாமலே கத்துவோமே அதனை எப்படி அறியமுடியும். அது உணர்வின் வடிவமல்லவா! பாசத்தை பிறர் சொல்லி படிக்க முடியுமா? இதயத்தின் மொழியை எழுத முடியுமா? மொழி என்பது பரிமாறப் பயன்படும் ஊடகமே தவிர அதுவே படியளக்கும் சாமியல்ல. அது தெரியாமல் ஏன்தான் இந்தப் பாமர மக்கள் அங்கு படையெடுக்கிறார்களோ?

ஒருவேளை எங்கள் பள்ளியில் கல்வியோடு ஒழுக்கமும், தன்நம்பிக்கையும், தன் காலில் நிற்கும் தாரக மந்திரத்தையும், இயக்கமாகச் செயல்படும் ஒற்றுமை உணர்வையும் கற்றுக் கொடுக்கிறீர்கள் என்றால் உங்கள் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் பெற்றோர்கள் பிடியில் இல்லை டீரளiநௌளன் மடியிலும் இல்லை. வருகின்ற தலைமுறையை வளர்த்தெடுக்கும் வார்த்தெடுக்கும் புண்ணிய பணிக்கு நீங்கள் புடமிட்டு இருக்கிறீர்கள், உங்களைப் போற்றுகிறேன். கல்வி என்பது கடைச்சரக்கல்ல நீங்கள் விற்பதற்கும் அவர்கள் வாங்குவதற்கும் இது ஒரு தலைமுறையில் கற்ற உயர்ந்த நல்ல நெறிகளை அடுத்த தலைமுறைக்கு ஏற்றிவைப்பது. கல்வியை எந்நாளும் போற்றுவோம்.

ARCHIVES